sand
sand

பெண் அதிகாரியை கொல்ல முயற்சி…கட்சி நிர்வாகி கைது?…

மணல் கடத்தல் நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரனைக்கு சென்ற வருவாய் பெண் அலுவலரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க ஆளும் அரசு எத்தனையோ விதமான நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

ஆற்றுப்படுகைகளில் தொடர் ரோந்தில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் இது போல சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கள்ளன் பெரிதா?, காப்பான் பெரிதா? என்பதின் படி ஆங்காங்கே சில மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாக செய்திகள் சொல்கியிருந்தது.

lorry
lorry

புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடியில் மணல் கடத்தல் நடப்பதாக தகவல் வந்ததை அடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் வருவாய் அலுவலர் தெய்வநாயகி. அப்போது அந்த வழியே லாரி ஒன்று வேகமாக வந்து கொடிருந்ததாம்.

இதனை பார்த்த தெய்வநாயகி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயற்சித்திருக்கிறார்.

இருந்தபோதும் அதனை தடுத்து நிறுத்த தெய்வ நாயகி முயற்சிக்க லாரியை அவர் மீது ஏற்றி கொல்ல முயற்சித்ததாக ஓட்டுனர் சங்கர், அதிமுக ஓட்டுனர் அணி நிர்வாகி சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.

இது குறித்த தகவல்களை பிரபல செய்தி சேனல் நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது. கள்ளக்குறிச்சி விஷசாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பெண் அரசு அதிகாரி மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்ததாக வெளியான செய்தி மிக பெரிய அதிர் ச்சியை  உருவாக்கியுள்ளது.