பலரும் யூ டியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். சமையல் வீடியோ, ஆன்மிக வீடியோ என தொடங்கி யூ டியூப்பில் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். மிக சாதாரணமாக இருந்தவர்கள் கூட இந்த யூ டியூப் சேனல்களால் பிரபலமாகி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய்யும் யூ டியூப் சேனல் தொடங்குகிறாராம். சமீபத்தில் இவர் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று இவர் தந்தை அறிவிக்க இவரோ இல்லை என்று அறிவிக்க இது போல குழப்பங்களை நீக்கவே தனியாக யூ டியூப் சேனல் தொடங்க இருக்கிறாராம் விஜய்.
இதை விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் அனைத்தும், இந்த சேனலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.