raja rani serial actress rithika

திருமணம் செய்து வையுங்கள் – நடிகையின் வீட்டிற்கு சென்று வாலிபர் தகராறு

உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என வாலிபர் ஒரு நடிகையின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா.

இவர் சென்னை வடபழனியில் உள்ள 100 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். காலிங் பெல்லை அடிக்க ரித்திகாவின் தந்தை வெளியே வந்துள்ளார். அவரிடம், உங்கள் மகளை நான் காதலிக்கிறேன். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள் என்ம கேட்டுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் வாலிபரின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் கடந்த 4 வருடங்களாக ராஜா ராணி சீரியலை பார்த்து வருகிறேன் என வாலிபரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரித்திகாவின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத்(22) என்பது தெரியவந்தது. அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் இப்படி நடந்து கொண்டார் என அவரின் பெற்றோர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். எனவே, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.