Yogi babu
Yogi babu

கான்ஸ்டபிளாக கலக்கப் போகும் யோகி பாபு…ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சாமே!…

ஒரு பக்கம் பார்த்தால் தமிழ் சினிமாவில் இன்று  காமெடியன்களுக்கு பஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர்களாக பார்க்கப்படுபவர்கள் காமெடியன்களுமே.

காமெடிக்காகவே ஓடிய படங்கள் ஏராளம் தான் எனச்சொல்லலாம். நகைச்சுவையின் மூலாமாக சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களை சொல்லி வந்த காமெடியன்களையும் கண்டுள்ளது தமிழ் சினிமா.

என்.எஸ்.கலைவாணி, சந்திர பாபு, நாகேஷ், தங்க வேலு, சுருளி ராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகிபாபு என தரமான காமெடியன்களால் கலைகட்டியது கோடம்பாக்கம். இவர்களில் சந்தானம், சூரி இப்போது முழு நேர ஹீரோவாக மாறிவிட்டனர்.

கவுண்டமணி, விவேக், வடிவேலு இவர்களெல்லாம் ஒரு சில படங்களில் கதாநாயகனாக தலையை காட்டியிருந்தாலும் பின்னர் காமெடியன்களாகவே தொடர்ந்தனர்.

Constable nandhan
Constable nandhan

சூரியும், சந்தானமும் மட்டுமே இப்போது வரை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே பாதையிலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள். யோகி பாபு இவர் ஒருவர் தான் இப்போது சொல்லிக்கொள்ளும் படியாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் ஒரே சிங்கிள் காமெடியன். இவரும் திடீரென் ஹீரோவாக மாறினார். ஆனாலும் தனது காமெடியன் டிராவலையும் தொடர்ந்து தான் வருகிறார்.

யோகி பாபு நடிக்க உள்ள “கான்ஸ்டபிள் நந்தன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. யோகி பாபு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். “மண்டேலா” படத்தின் வெற்றியை அடுத்து “கான்ஸ்டபிள் நந்தன்” படத்தில் மீண்டும் ஹூரோவாகியிருக்கிறார் யோகி பாபு.