எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம்னு ரசிகர்கள் மட்டும் இல்லங்க ஒட்டுமொத்த திரையுலகமே இவரேதான் கேட்டுட்டு இருந்தாங்க. திடீரென்று ஒருநாள் இவர் திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் வெளிவந்தது. அவர் வேறு யாரும் இல்லை நம்ம நகைச்சுவை நடிகர் யோகிபாபு தான்.
திடீரென்று ஒரு நாள் நடிகர் யோகிபாபுவிற்கும்-மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி யோகிபாபுவின் குலதெய்வ கோயிலில் உறவினர்கள் மட்டும் சூழ திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அடுத்த் மாதம் 5ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார்.

முதற்கட்டமாக தனது திருமண வரவேற்பு அழைப்பிதழை திரை உலகினருக்கு கொடுத்த கையோடு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.