உனக்கு மனைவியாக வாழ்ந்தேன் – காதலனுக்கு யாஷிகா எழுதிய உருக்கமான கடிதம்

257
Yashika written a letter to boyfriend

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் யாஷிகா. துணை நடிகையான யாஷிகா சென்னை வடபழனி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். பெரம்பூரை சேர்ந்த மோகன்பாபு என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

அதையடுத்து, திருமணம் செய்து கொள்ளாமல் பெரவள்ளூர் பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, யாஷிகாவை விட்டு மோகன்பாபு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த யாஷிகா கடந்த 12ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் நம்பி வந்த என்னை சித்ரவதை செய்து, என்னை ஏமாற்றி சென்ற மோகன்பாபுவிற்கு உரிய தண்டனை வாங்கி தரவேண்டும்” என வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு செய்தி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, மோகன்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாஷிகாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, மோகன் பாபுவை போலீசார் கைது செய்தனர். அதோடு, யாஷிகாவின் வீட்டில் ஒரு டைரியையும், அதில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் “நான் உனக்கு மனைவிபோல் இருந்தேன். உனக்காக எல்லாம் செய்தேன். என்னை புரிந்து கொள்ளாமல் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாய். எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் மரணத்திற்கு பின்னால் என்னை நீ நினைத்து பார்ப்பாய்” என யாஷிகா உருக்கமாக எழுதியுள்ளார்.

பாருங்க:  தற்கொலை செய்து கொள்ள இருந்த நடிகரைக் காப்பாற்றிய பிரகாஷ்ராஜ் – முன்னணி நடிகர் தகவல் !