Entertainment
நடு ரோட்டில் கூத்தாடி பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா – Funny வீடியோ!
விஜே பிரியங்காவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!
விஜய் சொத்து, TRPயின் சிகரம் என பிரியங்காவை புகழ்ந்து பாராட்டலாம். டிடிக்கு பின்னர் வெகுளியான பேச்சாலும், நல்ல திறமையுள்ள தொகுப்பாளினியுமாக மக்களை கவர்ந்தவர் விஜே பிரியங்கா. இவர் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து பல்வேறு ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இவர் கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரவீன் அதே விஜய் தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்தார். இதனிடையே இருவரும் சேர்ந்து வாழ்வதில்லை. பிரியங்காவின் வளர்ச்சி தான் இந்த பிரிவுக்கு காரணம் என செய்திகள் வெளியானது.
திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் கணவர் என அடையாளப்படுத்திய பிரியங்கா அதன் பின்னர் அவரை பற்றி எதுவுமே பேசாமல் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா செம குஷியாக நடுரோட்டில் ரஜினி பாடலுக்கு லோக்கலா குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
https://www.instagram.com/reel/CrklDCQqG70/?utm_source=ig_web_copy_link
