தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய மணிமேகலை, பின்பு காதலித்து பெற்றோரை எதிர்த்து காதர் ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, விஜய் தொலைகாட்சியில் இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்க்க முடிந்த்து.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சென்று இருந்த மணிமேகலை சென்னைக்கு திரும்ப முடியாத சூழ்நிலையால் கிராமம் ஒன்றில் தற்போதைக்கு தங்கி, அங்கு அவர் தினமும் செய்து வரும் சேட்டைகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார். இதற்கிடையில், கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்ஸால், சந்தோஷத்தில் திக்குமுக்காடிய மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மணிமேகலையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் ஹுசைன் பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனால் சந்தோஷத்தில் மிதந்த மணிமேகலை, ஜாலியா இருக்கு, ஒரே ஹாப்பியா இருக்கு இந்த பர்த்டே, லவ் யூ செல்லகுட்டி ஹுசைன் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/B_28TxsH2dT/?utm_source=ig_embed