ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்கவுள்ளார்.
சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விவேக் சினிமாவிற்கு வந்து பல வருடங்களாகியும் இதுவரை கமல்ஹாசனுடன் எந்த படத்திலும் நடித்ததில்லை.
இந்நிலையில், கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் விவேக் நடிக்கவிருப்பது தெரியவந்துள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் பாய்ஸ், அந்நியன், சிவாஜி என 3 படங்களில் விவேக் நடித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விவேக் ‘நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சாருக்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்கா வுக்கு என் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.