cinema news
கண்ணதாசன் காசிக்காக காத்திருக்க!…எட்டு அடியில் இடத்தை பிடித்தே விட்ட கல்யாண சுந்தரம்…
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி. இந்த இணை தமிழ் சினிமாவிற்கு ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது. சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்தனர். மெல்லிசை மன்னராக மாறினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
கண்ணதாசனின் வரிகளுக்கு சரியான மெட்டினை கொடுப்பார் விஸ்வநாதன் . அவரின் மெட்டுக்கேத்த வரிகளை கண்ணதாசன் கொடுத்தும் வந்ததால் இவர்களுடைய காம்பினேஷன் எப்பொழுதுமே பெரிதாக பேசப்பட்டு ரசிகர்களின் மனதில் இவர்களது பாடல்கள் ஆவலை தூண்டிவிடும்.
“பாசவலை” படத்தில் பாடல்கள் எழுதித்தர விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் கண்ணதாசன், மருதகாசிக்காக காத்துக்கொண்டு இருந்தார்களாம். அப்போது வாய்ப்பு கேட்டு 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்று இருக்கிறார். புது முகத்திற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கும் சூழ்நிலையில் இல்லை என சொல்லி அவரை போக சொல்லி விட்டார்களாம் இசை இரட்டையர்கள்.
அந்த வாலிபரும் ஒரு துண்டு சீட்டில் சிலவற்றை எழுதி கொடுத்துவிட்டு, நேரம் கிடைக்கும் பொழுது இதை படித்து பாருங்கள் என்று சொல்லி சென்று விட்டாராம்.
தங்களுக்கு கிடைத்த இடைவெளி நேரத்தில் அவர் கொடுத்த சீட்டில் என்னதான் இருக்கிறது என படித்துப் பார்த்த விஸ்வநாதன் ராமமூர்த்தியும் அசந்து போய்விட்டார்களாம் அப்படி இருந்ததாம் அந்த வரிகள். 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் வேறு யாருமில்லை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான்
சீட்டில் அவர் எழுதிக் கொடுத்திருந்தது குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்…., சட்டப்படி பார்க்க போனால் எட்டு அடி தான் சொந்தம்’ உள்ளிட்ட வரிகள். எப்படி இவரால் இப்படி எழுத முடிந்தது என ஆச்சரியப்பட்ட இசையமைப்பாளர்கள் கல்யாணசுந்தரத்தை வரச்சொல்லி இரண்டே மணி நேரத்தில் கம்போசிங்கை முடித்துவிட்டார்களாம். சி.எஸ். ஜெயராமன் இந்த பாடலை பாடியிருப்பார்