தமிழ்ராக்கர்ஸை மத்திய, மாநில அரசுகள்தான் ஒழிக்க வேண்டும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும்போது, திருட்டு விசிடி மற்றும் பைரஸியை ஒழிப்பேன் எனக்கூறித்தான் விஷால் வாக்குறுதி அளித்தார். தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் மாறினார். ஆனால், தமிழ்ராக்கர்ஸை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விஷால் “நான் கடவுளாக நினைக்கும் அரசுதான் பைரஸியை ஒழிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் நினைத்தால் ஒரே நொடியில் பைரஸியை ஒழிக்க முடியும்” என பதிலளித்தார்.