கதாநாயகன் என்றால் கண்டிப்பாக நல்ல நிறம் கொண்டிருக்க வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. கருப்பு நிற தோல் கொண்டு கதாநாயகனாக வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கையில் சொர்ப்பமே. இந்த லிஸ்டில் இரண்டு பேர் முக்கியத்துவம் பெறுகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்தே அந்த இருவர்.
ரஜினிகாந்த் தனது படம் ஒன்றில் கூட அவரது நிறம் குறித்து பேசியிருப்பார். சின்ன கண்ணும், பரட்டை தலையும் கருப்பு தோலும் நீ எப்பிடி டா ஹீரோவா வருவேன்னு கேக்குறாங்க என வரும் அந்த டயலாக் அது. ஆனால் பாட்ஷா பட ‘ஸ்டைலு, ஸ்டைலுதான்’ பாடலில் கருப்பும் ஓர் அழுகு என கண்டு கொண்டேன் உன்னாலே என கதா நாயகி பாடியிருப்பார் ரஜினியை பார்த்து.
“கருப்பன்”என்றும் ரசிகர்களால் செல்லாமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். அவரின்

அந்த நிறமே அவருக்கு ப்ளஸ் பாயின்டாக மாறியது நாளடைவில். இவர்களை போலான நிறத்தை கொண்டவர் விஷால். தயாரிப்பாளர் ஞானவேலு தான் விஷாலின் தந்தையிடம் ரஜினி. விஜயகாந்திற்கு பிறகு இந்த நிறம் கொண்ட நாயகர்களை பார்ப்பது குறைவாகிவிட்டது. அந்த இடத்தை விஷாலை கொண்டு நிரப்பலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார்.
அப்படி வந்தது தான் “செல்லமே” படம் என அதன் தயாரிப்பாளர் ஜி,ஞானவேலு சொல்லியிருந்தார். விஷாலின் தந்தையிடம் உங்கள் மகனை தவிர பிற நடிகர்கள் எல்லாம் அனுபவமானவர்களாக இருக்க வேண்டும் ஆனால் அது பட்ஜெட்டை அதிகரிக்கும் என சொல்லியிருக்கிறார்.
ஆனால் பட தயாரிப்பு செலவை பற்றி அதிகம் பேசாமல் அவர் கேட்ட தொகையை கொடுத்தாராம் விஷாலின் தந்தை. இவர்களை போலவே கருப்பு நிறம் கொண்ட நாயகர்கள் பட்டியலில் முரளியும் ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார். விஷால் நடிப்பில் தற்போது வெலியகிஉள்ளது ஹரி இயக்கிய “ரத்னம்”.