pasupathi
pasupathi

பதினஞ்சு வயசுல ஆரம்பிச்ச பயணம்….பட்டாசு பாலுவிலிருந்து சூப்பர் ஸ்டாருக்கு நண்பர் வரை…பட்டைய கிளப்பிய பசுபதி…

பார்த்திபனின் “ஹவுஸ்-ஃபுல்” படத்தில் நடித்து தனது என்ட்ரியை தமிழ் சினிமாவில் கொடுத்தவர். வில்லன் என்றால் பசுபதியை  அழைக்கலாம் என இயக்குனர்களின் மைன்டில் வந்தவர் இவர். “திருப்பாச்சி” படத்தில் விஜயை எதிர்த்து நின்ற வில்லன் பட்டாசு பாலு. தனது பெயரை ‘பாலு, பட்டாசு பாலு’ என கெத்தாக சொல்லிய விதத்திலேயே கைத்தட்டைகளை வாங்கியவர்.

கமல்ஹாசனுடன் “மும்பை எக்ஸ்பிரஸ்” படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்திருந்தாலும், கமலுடன் பொறி பறக்கவிட்ட படம் “சண்டியர்”. தோறனையான வில்லனாக வந்த இவர் காட்சிக்கு, காட்சி கமலுக்கு ஈடுகொடுத்து நடித்திருந்தார். படத்தில் அவர் காட்டிய ஆக்ரோஷமான நடிப்பு அசரவைத்தது.

pasupathy
pasupathy

ஒவ்வொரு நடிகரும் ஒரு ஒரு காலத்தில் பிரபலாமாக இருப்பார்கள். அதே போலேதான் பசுபதி பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுக்கி வைக்க முடியாத நபராக வலம் வந்தார். “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் பாரட்டப்பட்ட் நடிப்பு. இவரின் நடிப்பை தெளிவாக காட்டிய படம் தரணி இயக்கிய தூள். விக்ரமுடன் இவர் மோதிய காட்சிகள், இவர் காட்டிய வில்லத்தனம் இவரை தொடந்து வில்லனாகவே நடிக்கும் வாய்ப்புகளை மட்டுமே நடிக்க வைத்தது.

ரஜினியின் “‘குசேலன்” படத்தில் அப்பாவி தகப்பனாக, மிகப்பெரிய நட்சத்திரத்தின் நண்பனாக நடித்திருந்த இவர் பாராட்டுக்களை தன்வசப்படுத்திக்கொண்டார். அப்படியே குணச்சித்திர வேடங்கள், காமெடி சப்ஜெக்ட்கள் என தனது பாதைய மாற்றி அவற்றிலும் வெற்றிகளை பெற்றே வந்தவராக தொடர்கிறார்.

விஜயசேதுபதியின் “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் ரெளடியாக வந்தாலும் அதனை காமெடியாக செய்து ரசிக்கவைத்தவர். இத்தனை சிறப்பு மிக்க நடிப்பு ஆற்றலை கொண்டிருந்த இவர் கூத்துப்பட்டறையில் தனது 15வது வயதில் சேர்ந்து நடிப்புக்கலையை படிக்கதுவங்கினார்.