cinema news
நான் வெற்றி பெற்றவன்…முரசு கொட்டிய கமல்!…லோகேஷ் செய்த மாயம்…
கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாமல் நடன இயக்குனர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளார், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். அயராத உழைப்பினால் தனக்கும் மட்டுமல்ல தமிழ் திரை உலகையே பெருமை பேச வைத்தவர். ஏற்ற, இறக்கங்களை அதிகமாக பார்த்த கலைஞர்களில் முக்கியம் பெற்றவராக இருந்துவரும் இவருடைய சமீபத்திய படங்கள் அதிகம் வெற்றி பெற்றவைகளாக அமையவில்லை.
அறிவியல் சார்ந்த தொழில் நுட்பம் பலவற்றை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கும் உண்டு என்றாலும் அதில் பல எதிர்பார்த்த வரவேற்பை இவருக்கு பெற்றுத்தரவில்லை.
ஒரு கட்டத்தில் கமலின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்து விட்டது. இனி இவரது படங்களை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற பேச்சுக்களும் எழத்துவங்கியது.
இவரும் அரசியலில் தீவிரம் காட்டி வந்ததாலும் இது போன்ற பேச்சுக்களும் முக்கியத்துவம் பெற்றது. லோகேஷ் கனகராஜிடன் கைகோர்த்த கமலின் “விக்ரம்” படம் வெளியாகி வரலாறு காணாத வெற்றியை பெற்றுக்கொடுத்தது.
கமல்ஹாசனே தனது திரை வாழ்வில் அதிகமான வசூலை குவித்துக்கொடுத்து, தனது கேரியரை மீண்டும் தூக்கி நிறுத்திய படம் “விக்ரம்” என சொல்லியிருக்கிறார். இதே பெயரைல் 80களில் கமல் நடித்திருந்த படம் பெற்ற வெற்றியை விட அதிகமானதாவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” மாறியது.
கடந்த 2022ம் ஆண்டு இதே ஜூன் மூன்றாம் தேதி “விக்ரம்” படம் வெளியானது. படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைகிறது. விஜயசேதுபதி வில்லனாக நடித்திருந்த படம் இது. போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து வந்த படம்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனரகளின் வரிசையில் இணைய முக்கிய காரணமாக இருந்த படமும் கூடவே இது.
ரஜினியுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார் லோகேஷ். பல ஆண்டுகள் கழித்து மணிரத்னத்துடன் கூட்டு சேர்ந்து “தக்-லைஃப்” படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அதே போல ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்துள்ள “இந்தியன்-2” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.