Connect with us

நான் அப்பவே சொன்னேன்ல…சொன்னதை செய்து இயக்குனருக்கு பரிசு கொடுத்த விஜய்சேதுபதி!…

vijaysethupathi

cinema news

நான் அப்பவே சொன்னேன்ல…சொன்னதை செய்து இயக்குனருக்கு பரிசு கொடுத்த விஜய்சேதுபதி!…

விஜய்சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தனது 25வது படமான “சீதகாதி”யில் கோட்டை விட்ட விஜய்சேதுபதி 50வது படமான “மகாராஜா”வில் தமிழ் ரசிகர்களின் இதயம் என்கின்ற அரண்மனையில் புகுந்து ஆட்சி செய்திருக்கிறார் தனது அருமையான நடிப்பால்.

லட்சுமியை காணவில்லை என தேடி அலையும் விஜய்சேதுபதியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இப்போது. படத்திற்கு பலமாக பின்னனி இசை அமைந்துள்ளது.

அனுராக் காஷ்யப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பாரதிராஜா, முனீஷ் காந்த், மம்தா மோகன்ஸ், அபிராமி, “சதுரங்க வேட்டை” படத்தில் நடித்த நட்டி என பலரும் படத்தில் நடித்திருக்கின்றனர். முடிதிருத்துபவராக படத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி தேரும் லட்சுமி யார் என்பது தான் படத்தின் கதை.

ஒரு சில இடங்களில் டப்பிங் விஷயத்தில் ஓட்டை இருந்தாலும் அதை எல்லாவற்றையும் மறக்க அடித்து விட்டார்கள் விஜய்சேதுபதியும், படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனும்.

ரசிகர்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்புக்கு மத்தியில் விஜய்சேதுபதி படம் ரீலீஸான தியேட்டர்களுக்கு சென்று வருகிறார். படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்சேதுபதியும், நிதிலனும் சேர்ந்து எடுத்திருந்த வீடியோ இப்போது வைரல் ஆகிவருகிறது.

vijaysethupathi nithilan swaminathan

vijaysethupathi nithilan swaminathan

இதில் “ஹாய் டா நிதிலா, படம் ரிலீஸ் ஆகும் போது நாம இந்த வீடியோவ பாப்போம்.’ஐ லவ் யூ’ன்னு” சொல்லி பேசியிருக்கிறார் விஜய்சேதுபதி.

அதோடு மட்டுமில்லாமல் தனது அன்பு பரிசாக முத்ததையும் கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கு. தனது பரிசாக தனக்கு பிடித்தவர்களுக்கு பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

More in cinema news

To Top