நடிகை ஸ்ரீபிரியா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர். ரஜினி,கமலுக்கு இணையாக நடித்து புகழ் அடைந்தவர்.
“வாழ்வே மாயம்” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இவர் நடித்திருந்தாலும் அவரது கேரக்டரருக்கான முக்கியத்துவம் படத்தின் நாயகி ஸ்ரீதேவிக்கு நிகராகவே இருந்திருக்கும்.
350 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ஒட்டு மொத்தமாக இவர் இது வரை. “ஆட்டுக்கார அலமேலு” படத்தில் துடுக்குத்தனமான நாயகியாக நடித்திருக்கிறார்.
ரஜினியுடனும் ஸ்ரீபிரியா அனேக படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் “பில்லா” படம் இவர்கள் இருவருக்கும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. தாய் யானையை பிரிந்து வாடும் குட்டியை மீண்டும் தாயிடம் சேர்ககும் ரஜினி நடித்த “அன்னை ஓர் ஆலயம்” படத்தில் ஸ்ரீபிரியா தான் கதாநாயகி.

காட்டுக்குள் சென்று மிருகங்களை வேட்டையாடும் தைரியம், துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்திருப்பார். அதே போல உணர்ச்சிய பூர்வமான கட்சிகள் படத்தில் வரும் இடங்களில் சிறப்பான தனது நடிப்பாலும் ரசிக்க வைத்திருப்பார்.
வடிவுக்கரசியும் அந்த நாட்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தான்.ஸ்ரீபிரியாவும், வடிக்கரசியும் நல்ல தோழிகள். தன்னுடன் எவ்வளவு நெருக்கமாக காட்டினாலும் சினிமா தொடர்பான விஷயங்களில் அவர் அதிகம் உரிமை எடுக்க மாட்டாராம்.
ஸ்ரீபிரியாவிடம் நெருங்கி பழகாதவர்களுக்கு மட்டுமே அவர் கோபக்காராகவும், அதிகம் பேசுபவராகவும் தெரிவார். ஆனால் நிஜத்தில் அவரின் குணம் அப்படி கிடையாது.
ஸ்ரீபிரியாவை நல்ல மனம் கொண்டவர் என சொல்லிய வாடிவுக்கரசி, கேப்டன் விஜயகாந்தே ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் பேசும் போது ஸ்ரீபிரியா, வடிவவுக்கரசியை பார்த்தாலே தனக்கு பயம் இருந்ததாக சொன்னாராம்.