தான் முன்னேறியதோடு மட்டுமல்லாமல், பாரபட்சமின்றி தன்னை நம்பி வருபவர்கள் அனைவருக்கும் நல்ல வாழ்வு கிடைக்க அவரால் இயன்ற உதவிகளை செய்து வந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.
“புரட்சி கலைஞர்” இது தமிழக மக்கள் கொடுத்த பட்டம் விஜயகாந்திற்கு.. இவரால் இயக்குனர்களாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம் உண்டு. தனது இமேஜிற்கு சமமான ஹீரோக்களிடம் கூட ‘ஈகோ’ இல்லாமல் மிகுந்த நட்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய குணாதிசயம் கொண்டவர்.

“ஈட்டி” படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க, சத்யராஜ் வில்லனாக நடித்திருந்தார். படத்தில் சத்யராஜை யானை விரட்டுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட விருந்து. விஜயகாந்த், சத்யராஜை காப்பாற்றுவது தான் அந்த காட்சியின் முடிவு.
முதுமலையில் எடுக்கப்பட்ட காட்சிக்காக வரவழைக்கப்பட்டது யானை. பாகன் சத்யராஜை விரட்ட சொல்லியும், யானை சாந்தமாக நின்று கொண்டிருந்ததாம்.
இதை கவனித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், சத்யராஜை கூப்பிட்டு கையில் கொஞ்சம் வெல்லம் வைத்துக்கொண்டு அதை யானையிடம் காட்டி விட்டு அதற்கு கொடுக்காமல் ஓடுங்கள். வெல்லம் என்றால் யானைக்கு மிகவும் பிடிக்கும்,
அப்படி செய்தால் யானை உங்களை துரத்தும். காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார். அதற்கு சத்யராஜ் நான் நீங்க சொன்ன மாதிரியே செய்கிறேன். அந்த வெள்ளத்தை தூக்கி போட்டு விட்டால் இருந்த யானையின் கவனம் வெல்லத்தின் மீது விழுந்து விடும். அது தனது உணவை நோக்கி சென்றுவிடும் சரிதான் .
ஒரு வேளை நான் தூக்கிப்போட்டதை யானை கவனிக்காமல் வெல்லம் கையில் தான் இருக்கிறது என நினைத்து என்னை துரத்துவதை நிறுத்தவில்லை என்றால் எனது நிலை? என கேட்டாராம். ஒரு மேடையில் விஜயகாந்த் முன்னிலையில் பேசும் போது சத்யராஜ் இதனை சொல்ல அங்கிருந்தவர்களின் சிரிப்பலையில் அரங்கமே குலுங்கியது.