cinema news
ரஜினி கமலை மிஞ்சிய விஜய்சேதுபதி?…என்ன பிரயோஜனம்…அஞ்சு வருஷம் ஆளையே காணோமே…
வறுமையின் துரத்தலோடு வாழ்க்கை. தொட்டதெல்லாம் தோல்வி, கஷ்டப்படும் குடும்பத்தை கரை சேர்க்க வெளிநாட்டு வேலை ஆனாலும் அடி மேல் அடி. இது தான் “மகாராஜா” படத்தின் ஹீரோ விஜய்சேதுபதியின் ஃப்ளாஸ் பேக் வாழ்க்கை. டிவி நிகழ்ச்சிகளின் மீது கவனத்தை திருப்பி இருக்கிறார். குறும்படங்களை இயக்கியும் வந்திருக்கிறார்,
“தென்மேற்குப் பருவக்காற்று” திடீரென இவர் பக்கம் அடிக்க, அதன் பின் அடித்தது யோகம். பட்டு வந்த கஷ்டங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை.
இப்படி தான் திசை மாறியுள்ளது இவரது வாழ்க்கை. சீனு ராமசாமி தான் இவரது வாழ்க்கை மாற காரணமாக இருந்த சாமி. “சுந்தரபாண்டியன்” படத்தின் வில்லன். படத்தின் இயக்குருக்கு விஜய்சேதுபதி மீது பெரிய விருப்பம் கிடையாது. விஜய்சேதுபதியை மதிக்கவே இல்லையாம்.
ஆனால் விஜய்சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” தான் இப்போது கோலிவுட்டின் வைஃப். இவர் கடந்து வந்த பாதைகள் குறித்து சொன்ன பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் உதவி இயக்குனர்கள் என சொல்லப்பட்டு வந்தவர்களை வருங்கால இயக்குனர் என மாற்ற வைத்தது விஜய்சேதுபதி தான் என சொன்னார்.
“மகாராஜா” படத்திற்கு முன் வெளியான இவரது சில படங்கள் அட்டர் ப்ளாப்களாகத்தான் இருந்திருக்கிறது. அதிலும் “மகாராஜா” ரீலீசுக்கு முந்தைய ஐந்து வருடங்கள் படங்கள் ஓடாமல் இருந்த போதும் அவர் தனது பணிகளை நிறுத்தவில்லை என்றார்.
ரஜினி, கமல் தங்களது சினிமா கேரியரில் சாதனை செய்ய கிட்டத்தட்ட் 40 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக்கொண்டனர். ஆனால் விஜய்சேதுபதி வெறும் 20ஆண்டுகளில் அவர்கள் செய்த சாதனைகளை செய்தார் எனவும் பேசியிருந்தார் பாண்டியன்