லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் மாஸ்டர் திரைப்படத்தில் நடக்கின்றனர்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்து முடிந்தது. அடுத்தகட்டமாக இந்த மாதத்தில் படம் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசின் 144 தடை உத்தரவால் ஒட்டுமொத்த படப்பிடிப்புகளும், பட ரிலீஸ் தேதிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தில் ஏற்கனவே “லேட் மீ டேல் யு எ குட்டி ஸ்டோரி” மற்றும் “வாத்தி கம்மி” பாடல்கள் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதிகான பாடல்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்று எதிர்பார்த்திருந்த வேளையில், “முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திக்கோங்க” என்ற வசனத்துடன் விஜய் சேதுபதி குரலில் ஆரம்பிக்க, “போளகட்டும்” என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.