“திருமலை” படத்தின் மூலம் விஜய் மறுவாழ்வு கொடுத்தது என்றே சொல்லலாம். அதற்கு முன் வரை வந்திருந்த படங்களில் பல தோல்வி முகத்திலேயே இருந்தாலும் திருமலை விஜயை ஆக்ஸன் பாதைக்கு அழைத்து சென்று அவருக்கென ஒரு தனி ஸ்டைல் உருவாகவும் உதவியது.
“நேருக்கு நேர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த கௌசல்யா “திருமலை”யில் ரகுவரனுக்கு மனைவியாக நடித்திருப்பார். ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்க ரமணா படத்தை இயக்கியிருந்தார். ராகவா லாரன்ஸ் ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாடியிருப்பார். இருவரின் நடனம் அதிகமாக பாராட்டப்பட்டது.
படத்தின் ஸ்டன்ட் டைரக்டராக வில்லியம்ஸ் பணிபுரிந்திருக்கிறார். அவரது மனைவியும் நடிகையுமான சாந்தி வில்லியம்ஸும் “திருமலை” படத்தில் நடித்திருக்கிறார்.
ஷூட்டிங் இடைவெளியின் போது சாந்தி வில்லியம்ஸ் ஒரு ஓரத்தில் அமர்ந்ததிருந்தாராம். அங்கு ஃபேன் வசதி கூட இல்லையாம். இதனை பார்த்த விஜய் தனது அறையில் சென்று ஓய்வு எடுக்கச்சொன்னாராம் சாந்தியை.
அதனை ஏற்க மறுத்துவிட்டாராம் சாந்தி, அதே போல மற்றொரு இடைவெளியின் போது சாந்தி தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாராம். அங்கே கொசுக்களின் தொந்தரவு அதிகமாக இருக்க அதனால் சரியாக ஓய்வு எடுக்க முடியாமல் அவதிப்பட்டாராம் சாந்தி.
இதனை பார்த்த விஜய் சாந்தியை அழைத்து கோவத்தோடு இப்படி ஏன் சிரமப்படுகிறீர்கள். நான் காலையில் போனால் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டார் மாலையில் தான் வருவேன் அதனால் என் ரூமிற்கு சென்று நிம்மதியாக ஓய்வு எடுங்கள் என உரிமையாக கோபப்பட்டாராம். விஜய் தன் மீது காட்டிய அன்பு நெகிழவைத்ததாக சாந்தி வில்லியம்ஸ் சொல்லியிருந்தார்.