தளபதி 63-ஐ காலி செய்த நேசமணி டிரெண்டிங் – விஜய் ரசிகர்கள் ஷாக்!

247

நேசமணி ஹேஷ்டேக் டிரெண்டிங் தொடர்பாக விஜய் 63 பட தயாரிப்பாளர் பதிவிட்ட டிவிட் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

முகநூலில் சுத்தியல் பற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், பிரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேல் ஏற்ற காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரம் பற்றி பேச கடந்த 2 நாட்களாக Pray_For_Nesamani என்கிற ஹேஷ்டேக் வைரலானது.

ஆயிரக்கணக்கான பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவுகள் போடவும் நேற்று இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 7வது இடத்திலும் இருந்தது. இன்றும் இந்த ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் பற்றி அப்டேட் கேட்க, அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ‘தளபதி 63 பற்றி அப்டேட் கேட்க இது சரியான நேரம் அல்ல’ எனக்கூறி Pray_For_Nesamani  பதிவிட்டிருந்தார்.

இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாருங்க:  என் மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் டிவிட்