Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

sundar.c rajini vijay
cinema news Latest News Tamil Cinema News

ரஜினிக்கு மாற்று இவரு தான்…சூப்பரா சொன்னீங்க சுந்தர்.சி…கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!…

“அரண்மனை-4” வெற்றியால் மிகுதியான மகிழ்ச்சியில் இருந்து வருகிறாராம் சுந்தர்.சி. நகைச்சுவை கலந்த கதைகளிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்த இவர் “அரண்மனை” படத்திற்கு பிறகு ஹாரர் கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

கமலை வைத்து இவர் இயக்கிய “அன்பே சிவம்”ஆக இருக்கட்டும், அஜீத்தை இயக்கிய “உன்னைத்தேடி”யாக இருக்கட்டும் ரசிகர்களுக்கு அழுப்பு தட்டாத படங்களை கொடுப்பதில் வல்லவர் இவர். ரஜினியின் மெஹா ஹிட் படமான “அருணாச்சலம்”த்தை இயக்கியதும் இவரே.

arunachalam
arunachalam

 

சீரியஸான கதையை கொண்ட இந்த படத்தில் கூட செந்தில், ஜனகராஜ், ஏன் ரஜினிகாந்த் கூட செய்திருந்த நகைச்சுவை படத்தை இன்னும் அதிகமாக ரசிக்க வைத்தது. அதோடு ஆன்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் இந்த பஞ்ச் டயலாக்கை பேசாதவர்களே கிடையாது படம் வெளிவந்த நேரத்தில்.

ரஜினிக்கு மகுடன் சூட்டிய படம் இதுவும் தான். இந்த படத்தை ரீ-மேக் செய்தால் அதில் யாரை ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லிய சுந்தர்.சி. இப்போது இருக்கும் நடிகர்களில் விஜய் தான் அதற்கு பொருத்தமானவராக இருப்பார். ரஜினியின் இடத்தை படம் ரீ-மேக் செய்யாப்பட்டால் விஜயால் மட்டும் தான் நிரப்ப முடியும் என பேசியிருக்கிறார்.

ஏற்கனவே ரஜினி சூப்பர் ஸ்டாரா?, அல்லது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? என்ற விவாதம் ஓடி முடித்து விஜயே ரஜினி தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்றும், விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன் அவரது வளர்ச்சி தனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என ரஜினியும் சொல்லி அந்த சர்ச்சைக்குறிய அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த விவாதத்திற்கு முடிவு கொடுத்துவிட்டனர்.

சுந்தர்.சி சொல்லியது போல “அருணாச்சலம்” ரீ-மேக்கில் விஜய் நடித்தால் அது ஒரு புதுவைதமான ஸ்டைலில் தான் இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கும்.