கோடம்பாக்கத்தில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் விஷயம் என்றால் அது நடிகையும், பாடகியுமான சுசித்ராவின் சமீபத்திய பேட்டி தான். அந்த பேட்டி இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற தன் காரணம் அவர் குறிப்பிட்டுள்ள பெயர்களே. இதனால் தான் அதன் மீது அனைவரின் கவனம் இருந்து வருகிறது.
தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத, மோசமான விஷயங்களை அவரது ஆழ்மனதின் ஒட்டு மொத்த குமுறலாக இருந்தது பேட்டியில் அவர் பேசியிருந்த விதம். அவர் குறிப்பிட்டிடுந்த பெயர் யார் யாரெல்லாம் என்பதனை அனைவரும் அறிவார்கள். தனுஷ், ஆண்ட்ரியா, அனிருத் இவர்களோடு சுசித்ராவின் முன்னாள் கணவரான கார்த்திக்குமார்.
“சுசீ-லீக்ஸ்” என்ற பெயரில் வெளியியான வீடியோ தான் இதற்கு முன்னரும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. இந்த விஷயம் ஒரு பக்கம் கோடம்பாக்கத்தை குலுக்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் இன்னொரு மிக முக்கியமான நபர் இதனை பற்றி பேசியிருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கவர்ச்சி நடிகை ஷகீலா எழுப்பிய கேள்விகளுக்கு காட்டமான பதில்களை சொல்லியிருந்தவர் பயில்வான் ரெங்கநாதன். சுசித்ரா பொது வெளியில் இப்படியெல்லாம் பேசலாமா? என கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல். கார்த்திக் குமார் சுசித்ராவிடம் பேசிய ஆடியோவை ஆதரமாக காட்டியிருக்கிறார்.
மழை நின்றாலும், சாரல் நிற்கவில்லை என சொல்வது போல சுசித்ரா விஷயத்தில் தன்னை பற்றி பேசினால் அதனை சட்ட ரீதியாக சந்திக்க வேண்டியது வரும். அது நடந்தால் இந்த விவகாரம் கைது நடவடிக்கை வரை செல்லக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பயிவான் ரெங்கநாதன்.