“குட் பேட் அக்லி” பட ஷூட்டிங் ரொம்ப வேகமா நடந்துக்கிட்டு வருகிறதாம். இது அஜீத் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகின்ற செய்தியாக இருந்து வருகிறது. அடுத்தடுத்த படங்கள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறாராம் அஜீத். இதுவும் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது.
சமீபத்தில் ஷங்கர்- அஜீத் பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல்கள் வந்தது. இது சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டு போயிருக்கிறது அஜீத் ரசிகர்களை. இப்படி அடுக்கடுக்கான நல்ல செய்திகளை கொடுத்து வருகிறது அஜீத் குமாரின் திரை பயணம்.
வெங்கட் பிரபு சொன்னது போல கோலிவுட்டில் அதிகாமாக கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம் என்பதற்கு கூட சமீபத்தில் பதில் கிடைத்து விட்டது.

ஆனால் இன்று வரை எவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருப்பது “விடாமுயற்சி” ரிலீஸ் எப்போ?. தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகும் என சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.
படங்களில் சம்பளத்திற்கான ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாக வாங்கிய பிறகு, மீதி இருக்கும் பணத்தை மாதா மாதம் தனது அக்கவுண்டில் போட சொல்வது அஜீத்தின் பழக்கமாம். “விடாமுயற்சி” பட தயாரிப்பு நிறுவனம் இதனை செய்ய தவறி விட்டதாம் சில மாதங்களாக.
இதனால் செட்டில்மென்ட் கேட்டு நிற்கின்றாராம் அஜீத். இதனால் படத்தின் மீதி ஷூட்டிங் பாதிக்கப்படும். அது நடந்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் எனவும் அந்தணன் சொல்லியிருக்கிறார்.