Actress Vichitra

சத்தியராஜால் சினிமா வாய்ப்பு வரவில்லையா? – நடிகை விசித்ரா விளக்கம்!

நடிகை விசித்ராவின் சினிமா கேரியர் சத்தியராஜால் வீழ்ந்தது என எழுந்த கருத்துக்கு விசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.

90களில் காமெடி நடிகர் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் விசித்ரா. அதன்பின் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி விட்டார்.

சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் “தமிழ்ல முன்னனி கதாநாயகியா வந்திருக்க வேண்டியது..  சத்தியராஜ் மாம்ஸால போயிடுச்சு” என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறியுள்ள விசித்ரா “என் திறைமை மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவர் சத்தியராஜ். அதனால்தான், அவர் இயக்கிய வில்லாதி வில்லன் திரைப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் வழங்கினார். ஒரே மாதிரியான வேடங்களை கொடுத்த தமிழ் சினிமா நான் நல்ல வேடங்களில் நடிக்க விடாமல் தடுத்துவிட்டது” என பதில் கூறியுள்ளார்.