cinema news
இப்படி குத்தாட்டம் போட வைச்சது இவங்க தான்…கதாநாயகளின் கால்களை சோதிச்சது பதம் பார்த்தவர்…
தமிழ் சினிமா என்று சொன்னாலே கண்டிப்பாக அதில் பாடல்களுக்கு முக்கிய பங்கு இருக்கத்தான் செய்யும். படம் எப்படி இருந்தாலும் பாடல்களால் ஹிட்டான படங்களும் நிறையவே இருக்கிறது. அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தியேட்டரில் விசில் சத்தம் பறப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்டம், கொண்டாட்டம் தான்.
பெரும்பாலான கதாநாயகர்கள் நடனமாடுவதில் வல்லவர்களாக தான் இருப்பார்கள். நடிகைகள் அவர்களுக்கு ஈடுகொடுத்து நடனமாடி பாடல்களின் உற்சாகத்தை அதிகரிக்க செய்வார்கள். இப்படி பாடலில் ஆடும் நாயகிகளுக்கு பின்னனி பாடுபவர்களுக்கும் இதில் முக்கியமான இடமும் உண்டு.
இப்படிப்பட்ட பெண் பாடகர்களில் ஸ்ரீலேகா பார்த்தசாரதியும் முக்கியமானவர் ஆவார். இவரின் வைஃப் வாய்ஸ்ல் பல குத்து பாடல்கள் உண்டு. “மதுர” படத்தில் வரும் ‘பம்பரக்கண்ணு பச்சமிளகாய்’. “ஒற்றன்” படத்ததில் வந்த ‘சின்ன வீடா வரட்டுமா?’…வும் இவரின் குரலிலேலேயே உருவானது.
“சாமி” படத்தில் வரும் கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?… பாடலில் திரிஷா ஆடியது ஸ்ரீலேகாவின் குரலுக்குத்தான். சோனியா அகர்வால் “கோவில்” படத்தில் ஆடிப்பாடிய ‘கொக்கு மீனை திங்குமா?’… பாடலுக்கு குரல் கொடுத்தது இவரே தான். தியேட்டரையே குலுங்க வைத்த “தேவதையை கண்டேன்” படத்தில் வந்திருந்த ‘ஓரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னை மரம்’.
தனுஷ் நடித்த இந்த படத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது ஸ்ரீலேகா பாடிக்கொடுத்த இந்த பாடல். விஜய், ஜோதிகாவின் அலப்பறையான ஆட்டத்தில் வந்திருந்த ‘திமிசுகட்ட’ பாடலை பாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்ததும் இவரே. “திருமலை” படத்தில் இந்த வரும் இந்த பாடலை பாடியிருந்தார் ஸ்ரீலேகா பார்த்தசாரதி. இவரது குரலில் வெளிவந்த குத்து பாடல்களுக்கு ஆட வைத்து நாயகிகளின் கால்களை பதம் பார்த்தவர் இவர் என்றும் கூட சொல்லலாம்.