Latest News
நாளை ரிலீஸ்-க்கு ரெடி… வேட்டைக்கு ரெடியாகும் வேட்டையன்…!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 73 வயதான நிலையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் இயக்குனர் எல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இது திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ஸ்ருதிஹாசன், ராணா ரகுபதி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன், ரோகிணி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் உலகம் எங்கும் நாளை ரிலீஸ்-ஆக இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முன்னதாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படத்தைப் போல இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.