---Advertisement---

சிவாஜியும் நானே எம்.ஜி.ஆரும் நானே…ரஜினி பாணியில் ஆட்ட நாயகனாக மாறிய வெற்றி மாறன்…

Published on: June 2, 2024
vetrimaran
---Advertisement---

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி கதா நாயகனாக நடித்து வெளிவந்துள்ள “கருடன்” சக்கை போடு போட்டு வருகிறது. சூரியின் நடிப்பும். படத்தின் இயக்கமும் பெரிய அளவில் பேசப்பட்டாலும் கதைக்கு உரிமையாளர் வெற்றிமாறன் தான். “பொல்லாதவன்” படத்திலிருந்து துவங்கியது தமிழ் சினிமாவில் இவரது வெற்றி பயணம்.

“ஆடுகளம்” வெளியாகி களத்தை கைப்பற்றியதோடு விருதுகள் பலவற்றையும் தன் வசப்படுத்தியது. படத்தின் பெயருக்கு ஏற்றார் போலவே அசுரத்தனமான வெற்றியை பெற்றது “அசுரன்”.

aadukalam viduthalai
aadukalam viduthalai

“பாவக்கதைகள்” பெரிய அளவிலான வெற்றியை பெற்றுத்தராவிட்டாலும் வெற்றி மாறனின் பெயரை சொல்ல வைத்தது. காமெடியனாக மட்டுமே பார்த்து  கருடன் படத்தில் சூரி நடித்துள்ள விதம் அனைவராலும் பாராட்டப்படுகிறது. அப்படி ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூரி.

காமெடியனாக மட்டுமே பார்த்து  பழக்கப்பட்ட சூரியின் திறமையை கண்டறிந்து அவரை கதாநாயகனாக மாற்றி அழகு பார்த்தவர்.முன்னனி கதாநாயகனாக தன்னால் வலம் வர முடியும் என்பதை நிரூபிக்கு விதமாக செயல்பட்டு வரும் சூரியை  வெளிவுலகிற்கு காட்டியது வெற்றிமாறனே.

இயக்குனர், கதாசிரியராக மட்டுமல்லாமல் தயாரிப்பளராக இருந்தும் வெற்றிகளை குவித்தவர் வெற்றிமாறன். “விசாரனை”, “வட சென்னை” இந்த இரண்டு படங்களை எழுதியதும் அதனை தயாரித்ததும் இவரே.

இதனை போல “மிக மிக அவசரம்”, “உதயம் என்.ஹைச்.-4”, “கொடி”, “பொறியாளன்”, “அனல் மேலே பனித்துளி”, “அண்ணனுக்கு ஜே”, “லென்ஸ்” இத்தனை படங்களின் தயாரிப்பாளரும் வெற்றி மாறனே.

“விடுதலை” பாகம் இரண்டினை துவங்கும் வேலைகளில் ஈடுபட்டு வரும் வெற்றி மாறன் அது முடிந்த பின்னர் சூர்யாவுடன் இணையவுள்ள “வாடிவாசல்” படத்தின் வேலைகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

পড়তে ভুলবেন না