Connect with us

யாரும் வரவேண்டாம் தம்பி கல்யாணத்துக்கு…பிரேம்ஜி திருமணத்தில் டுவிஸ்ட் கொடுத்த வெங்கட்பிரபு?.

venkat prabhu premji

cinema news

யாரும் வரவேண்டாம் தம்பி கல்யாணத்துக்கு…பிரேம்ஜி திருமணத்தில் டுவிஸ்ட் கொடுத்த வெங்கட்பிரபு?.

பாகுபலியை கட்டப்பா எதற்காக கொண்றார்?, சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா?, இதே போல கோடம்பாக்கத்தில் அதிமாக காதில் விழுந்த கேள்வி பிரேம்ஜி அமரனுக்கு எப்போ கல்யாண்ம்?.

44 வயதை கடந்த நிலையில் தான் விரும்பிய பெண்ணையே மனைவியாக்கப்போகிறார் இவர் வருகிற 9ம் தேதியன்று.

முதலில் பலரும் கூட யாரோ ப்ராங்க் பண்ணத்தான் பிரேம்ஜிக்கு திருமணம் என வலைதளங்களில் அழைப்பிதழ் ஒன்றை டிசைன் செய்து சுற்ற விட்டிருக்கிறார்கள் என நினைக்கும் விதமாகத்தான் இருந்தது. பிரேம்ஜி அமரனின் கல்யாண பத்திரிக்கையை பார்த்த பொழுது. ஆனால் பிறகு தான் தெரிய வந்தது அது உண்மை என.

premji

premji

பிரேம்ஜி திருமணம் குறித்து  இயக்குனரும் அவரின்  சகோதரருமான வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை  வைத்துள்ளார். அதில் தனது சகோதரர் அவர்  விரும்பிய பெண்னையே மணமுடிக்கவிருக்கிறார். அனைவரும் அவர்,அவர் இருக்கும் இடத்திலிருந்தே மணமக்களை ஆசிர்வதியுங்கள்.

தங்களது தாயாரின் ஆசிர்வாதத்தோடு நடக்க உள்ள இந்த சுப நிகழ்வை எளிய முறையில் நடத்துவதாக தான் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத விதாமாக திருமண அழைப்பிதழ் வலைதளத்தில் வெளியாகியது.

மணமகளுக்கும், மீடியாவிற்கும் எந்த சம்மந்தமும்  கிடையாது. திருமணம் முடிந்த பிறகு மணமகள் புகைப்படத்தை பகிர்கிறேன் எனவும் தனது கோரிக்கையோடு சேர்த்துள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்வில் விரைவில் சந்திப்போம் என்றதோடு “கோட்” படத்தின் அப்டேட் விரைவில் வரவிருக்கிறது எனவும் சொல்லி உள்ளார் வெங்கட் பிரபு.

எது எப்படியோ பிரேம்ஜிக்கு திருமணம் முடிந்து, அவரை தம்பதி சகீதமாக பார்க்கவேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கும் பிரேமின் ரசிகர்களின் எண்ணம் நிறைவேற குறைவான நாட்களே உள்ளது.

More in cinema news

To Top