தமிழ்ராக்கர்ஸை கண்டுபிடிக்க வில்லையெனில் சினிமாத்துறையை இழுத்து மூட வேண்டிய நிலை வரும் என இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
புதிய திரைப்படங்களை படம் வெளியான தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் அன்றே வெளியிட்டு தமிழ் திரையுலகுக்கு தொடர்ந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆனால், அந்த இணையதளத்தை முடக்க முடியவில்லை.
இந்நிலையில், பொதுநலன் கருதி பட டிரெய்லர் வீடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் “ பேரன்பு, சர்வம் தாளமயம் படங்களை பார்க்க தியேட்டருக்கு போனால் படம் இல்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. ஆனால், தியேட்டர் கிடைப்பதில்லை. பேரன்பு, சர்வம் தாளமயம் இரு படங்களும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்து விட்டது. இப்படி போனால் தமிழ் சினிமாவே அழிந்து போகும்.
தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்கிறது? இதை சொல்லித்தானே பதவிக்கு வந்தீங்க.. தமிழ்ராக்கர்ஸை கண்டுபிடிங்க. இல்லனா தமிழ் சினிமாவை இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை வரும்” எனப்பேசினார்.