பெயர் மாறும் வர்மா – புதிய தலைப்பு அறிவிப்பு!

444
Varma tittle is changed as Adithya varma

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள வர்மா படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் ஆனது . விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகம் செய்து ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இப்படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் படத்தை பார்த்த விக்ரம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் பாலா, ஒரிஜினல் கதையில் செய்த திருத்தத்தால் முழு படத்தையும் கைவிட்டதாக அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது. மேலும் துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் புதிய இயக்குனர் மூலம் படத்தை இயக்கப்போவதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும், பாலிவுட் நடிகை பனிடா சந்து துருவுக்கு ஜோடியாக நடிக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது.

தற்போது படத்தின் தலைப்பை ஆதித்யா வர்மா எனவும் மாற்றியுள்ளனர். இப்படத்தின் இயக்குனர் என்பது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  ஆயோக்யா பட சிக்கல்; இது அயோக்கியத்தனம் - சீறும் ஆர்.பார்த்திபன்!!