பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படம் காதலர் தின போட்டியிலிருந்து மார்ச் மாதத்துக்கு தள்ளி போயுள்ளது.
தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் விக்ரம் வாங்கினார். அப்படத்தில் தனது மகன் துருவ் நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். எனவே, பாலா இயக்கத்தில் ‘வர்மா’ உருவானது. காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதால் வருகிற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
ஆனால், அந்த தேதியில் கார்த்தியின் ‘தேவ்’ உட்பட பல திரைப்படங்கள் வெளியாகிறது. எனவே, வர்மா படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, விலங்கு நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழும் இன்னும் கிடைக்கவில்லை.
எனவே, ‘வர்மா’ ரிலீஸ் மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.