Latest News
வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணமா…? வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்…!
வனிதா விஜயகுமாருக்கும், ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் நடைபெற போவதாக புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் படங்களிலும் சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகப்பெரிய அளவில் இவருக்கு ரீச் கிடைத்தது. அதற்கு முன்னதாக ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் ஒன்றாக காதலித்து வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
பின்னர் இருவரும் மனக்கசபால் பிரிந்து விட்டன. தற்போது அவர்கள் இருவரும் இணைந்து புதிதாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. அதில் வனிதா கடலோரத்தில் ராபர்ட் மாஸ்டருக்கு ப்ரபோஸ் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சேவ் தி டேட் என்ற தலைப்பில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்த நெடிஷன்கள் பலரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்று கூறிவருகிறார்கள். ஏற்கனவே பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். அந்த பீட்டர் பால் சமீபத்தில் இறந்து போய்விட்டார். இதற்குப் பிறகும் வனிதா மீண்டும் திருமணம் செய்யப் போகிறாரா? என்று பலரும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இவர்கள் இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் இது என்று கூறப்படுகின்றது. ஒரு வேலை இது படத்திற்கான பிரமோஷன் ஆக கூட இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எது உண்மை என்பது அக்டோபர் 5-ம் தேதி வெளிவரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.