வெளியேறிய கவின் – வனிதா விஜயகுமார் கூறியது என்ன தெரியுமா?

230
vanitha

பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறியது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேற முடிவெடுத்தார். சாண்டியும், லாஸ்லியாவும் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்க வில்லை. அவர் வீட்டிலிருந்து வெளியேறும் காட்சி நேற்று காட்டப்பட்டது.

இந்நிலையில், கவின் இந்த முடிவை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வனிதா விஜயகுமார் ‘இந்த முடிவை எடுத்ததற்காக நான் கவினுக்கு ஒரு சல்யூட் வைக்கிறேன். இதை தியாகம் அல்லது என்ன வேண்டுமனாலும் சொல்லுங்கள். இந்த வாய்ப்புக்காக கவின் காத்திருந்தான். எந்த விதிமீறலிலும் அவன் ஈடுபடவில்லை. எந்த நாடகத்தையும் நடத்தவில்லை. அவன் எதுவாக இருந்தானோ அதை மனசாட்சியோடு நிரூபித்துள்ளான்’ என பதிவிட்டுள்ளார்.

 

பாருங்க:  இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்...