cinema news
என்னதான் இருந்தாலும் ராஜா ராஜாதான்யா…புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!…
வரிகளால தான் பாடல் ஹிட் ஆகுமா? அல்லது இசையாலதான் பாடல் ஹிட் ஆகுமா? என்ற பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடறது ஓடிக்கிட்டே இருக்கட்டும். அது முடிவுக்கு வர்ற நேரத்துல வரட்டும். ஆனா அதுக்கு முன்னால இந்த விஷயத்தையும் கொஞ்சம் பார்க்கலாம்.
இசைஞானி இளையராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்தும் இணைந்து பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பல வருஷம் ஆகிவிட்டது. இந்தக் கூட்டணி மீண்டும் சேராதா?, அவர்களுடைய காம்பினேஷன்ல ஒரு டலையாவது புதிதாக கேட்டு விடமாட்டோமா? என ஏங்கி காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம் தான் இன்றும்.
வைரமுத்து ஒரு முறை மேடையில் பேசும் பொழுது இளையராஜாவைப் பற்றி குறிப்பிட்டுருந்தார். யுவன் சங்கர் ராஜாவை அழைத்த வைரமுத்து நான் உன் தந்தையை கண்டு எதுக்கு வியக்கிறேன் என்று தெரியுமா? எனக்கேட்டு, அதற்கு சில உதாரணங்களையும் கொடுத்திருக்கிறார்.
இப்பொழுது உள்ள இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசையமைக்க அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். படம் ஓடுவதோ மூன்று நாட்கள் தான், அதற்கு இசையமைக்க ஒரு வருடம் வரை எடுத்துக்கொள்கிறார்கள் என சொன்னதும் அரங்கத்தில் சிரிப்பலை கிளம்பியது.
“காதல் ஓவியம்” படத்திற்கு இளையராஜா இசையமைத்த பொழுது ஒரே நாளில் ஏழு பாடல்களுக்கான டியூன் களையும் போட்டு முடித்து கொடுத்திருந்தாராம். அதற்கு வைரமுத்து இரண்டே நாட்களில் வரிகள் எழுதினாராம். “சிந்து பைரவி” படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் ஏழு நாட்களில் முடித்துக் கொடுத்தாராம்.
அதேபோல “முதல் மரியாதை” படத்தினுடைய பாடல்கள் எல்லாவற்றையும் வெறும் ஐந்து நாட்களிலேயே முடித்துக் கொடுத்தாராம். மெட்டு போடுவதற்கு என இளையராஜா ஹார்மோனியத்தின் மீது கை வைத்தால் பாடலுக்கான மெட்டை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டாராம்