சமூக வலைத்தளங்களில் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ள நிலையில், தன்னை திரை உலகினர் ஒழிக்க பார்க்கிறார்கள் என வடிவேலு கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் சுத்தியல் பற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், பிரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேல் ஏற்ற காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரம் பற்றி பதிவு போட 2 நாட்களாக Pray_For_Nesamani என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
ஆயிரக்கணக்கான பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவுகள் போடவும் நேற்று இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 7வது இடத்திலும் இருந்தது. இன்றும் இந்த ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி ஒரு பிரபல தொலைக்காட்சி வடிவேலுவிடம் கருத்து கேட்ட போது ‘பல வருடம் கழித்தும் இதை மக்கள் பேசுகின்றனர் எனில் அது எனக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு. ஆனால், என் சினிமா வாழ்க்கையையே அழிக்க வேண்டும் என சிலர் கணக்கு போடுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கமே எனக்கு எதிராக இருக்கிறது’ என புலம்பியுள்ளார்.
இம்சை அரசன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.