cinema news
உங்கள சிரிக்க வச்ச என்னைய இப்படி சீரியஸ் ஆக்கீட்டீங்களே!…வடிவேலு சொன்ன செய்தி…
‘வைகைப்புயல்’ வடிவேலு இவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர். இவரின் சிரிப்பு படங்களுக்கு மயங்காத மனங்களே கிடையாது என சொல்லலாம். அந்த அளவு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனது நகைச்சுவை நடிப்பால் கவர்ந்திழுத்து வைத்திருந்தவர்.
இவரது உடல் மொழி (பாடி லேங்குவேஜ்) இதுவே இவருக்கு மிகுந்த பலமாக அமைந்தது. இவர் வசனம் பேசினால் அது ஒரு விதாமான காமெடியாக இருக்கும். இவரின் உடல் அசைவுகளை கண்டு ரசிக்கவே தனி ரசிகர் கூட்டமே உண்டு என சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் நடித்த “சந்திரமுகி” படத்தில் ரஜினி, ஜோதிகாவிற்கு இணையான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருந்தனர் அதற்கு காரணம் படத்தில் வந்த இவரது நகைச்சுவை காட்சிகள் அந்த அளவு வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால்.
அதே போலத்தான் விஜய்,சூர்யா நடித்த “ஃப்ரண்ட்ஸ்” படத்தில் கூட இவரது காமெடி பெரிதாக பேசப்பட்டது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் வடிவேலுவின் நகைச்சுவை படங்களின் பட்டியலை. சில காரணங்களால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அதுவரை வடிவேலுவை இப்படி சீரியஸாக படம் முழுவதும் பார்த்திருக்க மாட்டார்கள் ரசிகர்கள். அப்படியான கதாப்பாத்திரம் அது. அதன் பிறகு தன்னை படங்களில் புக் செய்ய வந்தவர்கள் எல்லாம் இதே போல சீரியஸான வேஷங்களில் நடிக்கவே அழைத்தார்களாம்.
அதனை எல்லாம் தவிர்த்தே விட்டாராம் வடிவேலு. பழைய வடிவேலுவை போலவே நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்திருக்கலாம் அதற்காகத்தான் இப்படி செய்தார் போல வடிவேலு.