cinema news
அலாட்டா இருங்க…ஆறு மணிக்கு போஸ் பாண்டி வரப்போறாராம்…அடிச்சி தூள் பண்ண வேண்டியது தானே?…
சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களிடம் வெளிப்படுத்தி அவர்களின் அன்பையும், ஆசிகளையும் பெற்றார். சின்னத்திரையின் மூலம் பிரபலமானவர் இவர். வெள்ளித்திரைக்கு வருவதையே தனது வாழ்வின் கனவாக வைத்திருந்து அதற்காக கடுமையாக உழைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
அரசியலில் கவனம் செலுத்த தயாராகி வரும் விஜயின் சினிமா கேரியர் எப்படி அமையும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று தான். ஆனால் சில நடிகர்கள் இதனை மனதில் வைத்துக்கொண்டு இப்போதே சுதாரித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர் .
விஜயை போலவே சிவகார்த்திகேயனுக்கும் இளைஞர்களும், குழந்தைகளும் தான் அதிகமாக இருக்கின்றனர் ரசிகர்களாக. ஒருமுறை விஜய் கூட சிவகார்த்திகேயனை மேடையில் வைத்துக்கொண்டே இதனை சொல்லியிருந்தார் நேரடியாக. இவரது படத்தில் யதார்த்தமான னகைச்சுவை காட்சிகள் அதிகமாக இருப்பதாலேயே இவரை அதிகம் பேர் ரசிக்கின்றனர்.
“அமரன்” படத்தில் தற்போது நடித்து வருகிறார் எஸ்.கே. அடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கயிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியானது. லக்ஷ்மி மூவீஸ் இவர்கள் இணையும் படத்தினை தயாரிக்க உள்ளது எனவும் சொல்லப்பட்டது.
சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிரூத் இணைய உள்ள ‘எஸ்.கே-23’ படத்தின் இந்த ‘அப்-டேட்’ செய்தி வெளியானது இவர்கள் மூவரின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக “அமரன்” படம் வெளியாவதை எதிர்பார்த்து நிற்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியாகி விட்டனர் இந்த அறிவிப்பின் பிறகு.