Latest News
வேலையை துவக்கிட்டாராமே தலைவர்?…இனி ட்ரெண்ட் கூலி தானா!…
ரஜினி நடிப்பில் வளர்ந்து வருகிறது “வேட்டையன்”. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஆயுத பூஜை பண்டிகை நேரத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. “ஜெயிலர்” படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான “வேட்டையன்” மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
“வேட்டையன்” படத்தில் நடித்து வந்த போது ரஜினி தனது பழைய ஃபார்முலாவை கையில் எடுத்தார். ஒரு படம் முடிந்து வெளியான பிறகு தான் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆவதை கடந்த சில ஆண்டுகளாக பழக்கத்தில் வைத்திருந்தார் ரஜினி.
ஆனால் இப்போது இதை மாற்றி தனது பழைய பாதையில் பயணிக்க துவங்கி “வேட்டையன்” பட ஷூட்டிங் நடக்கும் போதே அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி.
“கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்”, “லியோ” என வரிசையாக வெற்றிப் படங்களைத் தந்த இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்தார்.
இவர்கள் இருவரும் இணையும் இந்த படத்திற்கு “கூலி” என பெயரிடப்பட்டுள்ளது. அதோடு படத்தினுடைய போஸ்டர்கள் வெளியிடப்பட்டு மாஸை கிளப்பியது. “கூலி” படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் “கூலி” படத்தை பற்றிய அப்-டேட்டை வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ். படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது சொல்லி இருக்கிறது சன் பிக்சர்ஸ். படத்தினுடைய ரிலீஸ் தேதி உள்ளிட்ட அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.