cinema news
அதிருதுப்பா பூமி…ஆட்டத்தை ஆரம்பித்த அஜீத் ரசிகர்கள்…வெளிவந்த அப்டேட்!…
“விடாமுயற்சி” என்ன ஆனது என்றே தெரியவில்லை. படபெயர் சொல்லப்பட்ட பிறகு அதனை பற்றி இதுவரை எந்த தகவலுமே வரவில்லையே என கவலையில் இருக்கின்றனர் அஜீத்குமாரின் ரசிகர்கள். ஆனால் அதற்கு புத்துயிர் கொடுக்கும் விதமான பணிகள் நடந்து வருவதாக சமீபத்திய செய்திகள் சொல்லியது. அது உண்மையா?, இல்லை பொய்யா? என நினைக்கும் நேரத்தில் ஆறுதலாக வந்தது தான் “குட் பேட் அக்லி” பட அறிவிப்பு.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் செய்தி. அஜீத் ரசிகர்களின் ஆவலுக்கு தீனி போடும் விதாமான அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது படக்குழு. அஜீத் ஆதீக், தேவிஸ்ரீபிரசாத் கூட்டணியில் தயாராகிவரும் இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ செய்தியை சில நிமிடங்களுக்கு முன்னர் தான் சொல்லியிருக்கிறது படக்குழு.
அதோடு மட்டுமல்லாமல் அஜீத் குமாரின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்கள். மூன்று அஜீத் ஒரே நிற சட்டையில் இருப்பதான படம் வந்துள்ளது. அதனை கொண்டாடி வருகின்றனர் ஏ.கே. ரசிகர்கள். அஜீத்தின் கெட்-அப்களின் அடையாளமாக பார்க்கப்படும் கூலிங் கிளாஸ் இதிலும் இருக்கிறது. இதை அவர் அனிந்து இருக்கும் போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி கடலில் தளைத்து வருகின்றார்கள் ரசிகர்கள்.
“துணிவு” படத்திற்கு பிறகு அஜீத்தை திரையில் பார்க்க தவம் கொண்டு காத்திருக்கும் அவர்களுக்கு இன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் படம் தொண்டை வறன்ட தாகத்தில் வருபவரின் கண்களில் பட்ட மண்பானை தண்னீர் போல தான் இருப்பது போல உணர முடிந்தது.