பொதுவாக பண்டிகை தினங்கள், விடுமுறை தினங்களை கணக்கிட்டுத்தான் படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது இப்போது. முன்னனி கதாநாயகர்களின் படங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை.இன்றைய தேதியான “மே 9″ல் ரிலீஸ் ஆன படங்களில் இரண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்பொழுது இரண்டாம் பாகம் தயாராகி கொண்டிருக்கின்றது இந்தியன். முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக கூட இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல் பாகம் 1996ம் வருடம், இன்றைய தேதியான மே ஒன்பது தேதியில் தான் வெளியானது. தான் கொண்ட கொள்கைக்காக, அதற்கு இடையூறாக இருக்கும் தன் மகனை கூட விட்டு வைக்காமல் தந்தையையே கொலை செய்ய வைத்த படம்.
சமுதாயத்திற்கு தேவையான சிறந்த கருத்தை கருத்தினையும். வருங்காலம் வளமாக வளமாக களையப்பட வேண்டிய விஷயங்களையும் தெளிவாக சொல்லியிருப்பார் இயக்குனர் சங்கர். கமல்ஹாசன், சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி நடிப்பில் வெளிவந்தது இந்தியன். மனிஷா கொய்ராலா, ஊர்மிளா இவர்களும் படத்தில் இணைந்திருக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

விஜய் திரைப்பட வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது “லவ் டுடே” படம் ரிலீஸ் ஆனது இதே மே மாதம் ஒன்பதாம் தேதி 1997ம் வருடம் வெளியானது. காதலில் இப்படியும் ஒரு வகை உண்டு என்பதை அன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன படம் இது.
ஓடி, ஓடி போய் நாயகி சுவலட்சுமியை காதலிக்கும் நாயகன் விஜய். பல ஆண்டுகளாக காத்திருந்த நாயகனோ, காதலி சம்மதித்த போது அதை ஏற்க மறுக்கும் சூழ்நிலை இப்படி யாரும் எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸை கொண்ட படம் “லவ் ட