செல்வராகவன் இயக்கத்தில் பார்த்திபன், கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்து வெளிவந்த படம் “ஆயிரத்தில் ஒருவன்” இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் சங்கர் ராஜாவுடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
வரலாற்று பின்னனி மற்றும் நிகழ்காலம் என இரண்டும் கொண்ட கதையுடன் வெளிவந்ததால் இந்த படத்தை இசையால் வலுசேர்க்க வேண்டிய கட்டாய நிலையுமிருந்தது, மற்ற கதை அம்சம் கொண்ட படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது.
ஆனால் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அவர் விட்டுச் சென்ற வேலையை முடித்துக் கொடுத்தார் ஜி.வி பிரகாஷ். அந்தப் படத்தில் வரும் ‘உன் மேல ஆசை தான்’ பாடல் மீது திடீரென ஒரு சர்ச்சை கிளம்பியது.
யுவன் சங்கர் ராஜா இசையத்த “சர்வம்”படத்தில் அதே மெட்டில் ஒரு பாட்டு அமைந்ததாலே அந்த குழப்பம் ஏற்பட்டது.
நடந்தது என்ன என சொல்லப்பட்டது யுவன் சங்கர் ராஜா முதலில் செல்வராகவனுக்கு இந்த மெட்டடை போட்டுக் கொடுத்திருத்திருக்கிறார். அவர் படத்திலிருந்து விலகிய பிறகு யுவன் சங்கர் ராஜா டியூன் தான் போட்டதுதானே என ‘சர்வம்’ படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இசையினை வைத்து காட்சி அமைப்புக்கு தயாரான செல்வராகவனோ ஜி. வி.பிரகாஷ் குமாரை வைத்து கொண்டு அதே மெட்டில் பாடலை முடித்து விட்டார்.
“படையப்பா” படத்தில் வரும் மாப்பிள்ளை இவர்தான், ஆனா போட்டிருக்குற சட்டை என்ற ரஜினி, செந்தில் காமெடி மாதிரி தான் இவர்கள் இருவருக்கும் சொந்தமானதாக கருதப்பட்டு வருகிறது.