விஷாலுக்கே இந்த நிலைமையா? – அயோக்யா வெளியாவதில் சிக்கல்!

292

விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரும்புத்திரைக்கு பின் விஷால் நடித்த படம் அயோக்யா. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தெலுங்கில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவானது. வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 10ம் தேதியான இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்படம் இன்று வெளியாகவில்லை. இதனால் முன்பதிவு செய்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, படம் ஏன் வெளியாகவில்லை என விஷாலின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் வாங்கிய கடன் பிரச்சனை காரணமாக இப்படம் வெளியாகவில்லை என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருக்கிறார். ஆனால், அவர் நடித்த படமே வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  கமல்ஹாசன் நடித்துள்ள நாயகன் படத்தின் 33ம் ஆண்டு நிறைவு நாள் விழா