விஜய்சேதுபதியின் 50வது படம் “மகாராஜா”. தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இவர். இவரின் மாறுபட்ட நடிப்பினால் ஈர்த்தவர் இவர் எனவும் சொல்லலாம். “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் ஒரு விதமான நடிப்பு.
“மாஸ்டர்”, “விக்ரம்” படங்களில் மிரட்டலான நடிப்பு. இப்படி தனக்கான வேலையை தான் பொறுப்பேற்கும் படங்களில் சரியாக செய்து விடுவார் விஜய் சேதுபதி.

சினிமாவில் தனது 50வது படத்தினை “மகாராஜா”வின் மூலம் எட்டியுள்ளார் விஜய்சேதுபதி. இந்த படத்தின்ன் டிரையலர் சற்று முன் வெளியானது.
முடிதிருத்துபவராக இருக்காலாம் இவரது கேரக்டர் இந்த படத்தில் என்பதை சொல்லுவது போல தான் இவரும் பாரதிராஜாவும் முடிதிருத்துவது போல காட்சியும் வருகிறது.
“சதுரங்க வேட்டை நட்டி நடராஜனும் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக வந்திருக்கிறார். லட்சுமியை கண்டுபிடித்து தாங்க என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் விஜய்சேதுபதி.
மனதளவில் பாதிக்கப்பட்டவாராக நடித்துள்ளாரா? இவர் என்பது படம் வெளிவந்தால் மட்டுமே தெரிய வரும் என்பதுவே டிரையலர் பார்த்தவர்களின் கருத்தாக இருக்கிறது.
அனுராக் காஷ்யப், அபிராமி, அருள் தாஸ், முனீஷ்காந்த் என அணிதொடுத்து வருகின்றனர். பிரபலங்கள் விஜய்சேதுபதிக்கு துணையாக படத்தில். போதாக்குறைக்கு பாரதிராஜா வேறு.
பேஸன் ஸ்டுடியோ சுதன் படத்தை தயாரித்துள்ளார். நிதிலன் சுவாமினாதன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு லோக்நாத் இசையமைத்துள்ளார்.
பொதுவாகவே முன்னனி நடிகர்கள் என்றாலே அவர்களின் படங்கள் வெளியாகும் போது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அதுவும் அவர்களது 25வது, 50வது, 100வது படம் என்றால் கேட்கவே வேண்டாம். இது விஜய்சேதுபதியின் 50வது படம் என்பதால் படத்தின் மீது தொடர்ச்சியாக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.