cinema news
வசூலை அள்ளி குவித்து வரும் அரண்மனை4?…போட்டிக்கு ஆள் இல்லாமல் அன்-அப்போஸ்டாக ஜெயித்த சுந்தர்.சி!…
படங்களும் பெரிதாக வெளியாகவில்லை. ‘சம்மர் வெக்கேஷன் வேற’ வந்தாச்சு, பொழுது போக்கிற்கு என்ன செய்ய என தெரியவில்லையே இப்படிக்கூட இருக்கலாம் தமிழ்நாட்டுக்காரர்கள் பலரின் மனநிலை தற்போது.
அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், என்டெர்டைன்மென்டுக்கு நா கியாரன்டி, நான் இருக்கேன்னு சொல்லி அரண்மனை – 4லை ரிலீஸ் செய்துள்ளார் சுந்தர் சி. தமன்னனா, ராஷி கண்ணா நடிக்க அமானுஷ்யங்களுடன் மீண்டும் சன்டையிட்டுள்ளார் சுந்தர்.சி. இதுவரை வெளிவந்த அரண்மனை படங்களை விட இதில் விறுவிறுப்பு சற்று அதிகமாகவே இருப்பதாக பொதுவான ஔர் கருத்து நிலவியுள்ளது.
உங்களுக்கு முன்னாடியே நான் வருவேன்னு சொல்லி ஹரி கூட காம்பினேஷன் போட்டு விஷால் “ரத்னம்” படத்தையும் வெளியிட்டார். ஆனால் அது பல தியேட்டர்களை விட்டு காலியாகி வந்த இடத்துக்கே மீண்டும் மீண்டும் போய் சேர்ந்துடுச்சாம்.
போட்டிக்கு ஆள் இல்லாமல் அன் அப்போஸ்டா ஜெயிச்சிருக்கிறது சுந்தர். சி யின் அரண்மனை – 4. ரிலீஸ் ஆனதிலிருந்து இதுவரை சுமார் எத்தனை கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது தெரியுமா?.
முதல் நாள் 4.65 கோடியும், இரண்டாம் நாளில் 6.65 கோடியும், மூன்றாம் நாள்8.85கோடி, நான்காம் நாளில் 3.65 கோடி , ஐந்தாம் நாளான செவ்வாய்கிழமையன்று 3.04 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளதாம் . செவ்வாய்கிழமை வரை கணக்கெடுத்து பார்த்த போது சுமார் 34.15 கோடி ரூபாய் வரை வசூல் வந்திருப்பாதாக சொல்லப்படுகிறது.
அரண்மனை-4 லால் உற்சாகமாக இருக்கிறாராம் சுந்தர்.சி. எதிர்பார்த்தது போலான வெற்றியல்லவா இது அவருக்கு. இன்னும் சில நாட்களில் எப்படியும் 50 ருபாய் வசூலை பெற்றுத்தரலாம் என பேசப்பட்டு வருகிறது கோடம்பாக்கம் வட்டாரத்தில்.