cinema news
நா உளறலண்ணா…நைஸ் சாங்க் இது கேளுங்கண்ணா!…விஜய் சொன்னதை அப்பவே செஞ்ச டி.எம்.எஸ்?…
சிவாஜி பாடுகிறாரா?, எம்.ஜி.ஆர். பாடுகிறாரா? என தெரியாத அளவில் தான் இருக்கும் டி.எம்.எஸ். சௌந்தரராஜனின் குரல் வளம். அப்படி ஒத்துப்போகும் இவரின் வாய்ஸ். காதல் பாடல்கள், சோகப்பாடல்கள், சவால் பாடல்கள் என இதில் எதுவாக இருந்தாலும் இவரின் குரல் ஓசைக்கு அடிமை பட்டுக்கிடந்தது தமிழ் சினிமவே ஒரு காலத்தில்.
ஏ.வி.எம். தயாரிப்பில் ஏ.சி.திரிலோக சந்தர் இயக்கி முத்துராமன், காஞ்சனா நடித்த “அதே கண்கள்” பட பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு சுவாரசியத்தை பாடகர் டி.எம்.எஸ். ஒரு முறை சொல்லியிருந்தார். பொம்பள ஒருத்தி இருந்தாலாம், பூதத்தை பாத்து பயந்தாலாம் என்று துவங்கும் பாடல் அது. பாடலின் இடையே எதாவது ஒன்றை சொல்லி பின்னனி இசை வரும் இடத்தை வர்கல் இல்லாமல் நிரப்ப வேண்டும் என இசையமைப்பாளர் வேதா சொல்லியிருக்கிறார்.
அப்பொது சமயோதீக புத்தியோடு செயல்பட்ட டி.எம்.எஸ். உலறவும் வே|ண்டும் அதே நேரம் அதில் ஒரு மொழியும் கலந்திருக்க வேண்டும் என நினைத்து, தனது பூர்வீக பாசையான சௌராஷ்ட்ரா மொழியை இணைத்து சுடிஜா, சுடிஜா, சுடிஜா என்பதனை சேர்த்தாராம். அதன் அர்த்தம் விட்டுப்போ, விட்டுப்போ, விட்டுப்போ என்பதாம்.
அதேபோல சொன்னவா, சொன்னவா, சொன்னவா என்று அதே பாஷையில் பாட, அதன் அர்த்தம் விடமாட்டேன், விடமாட்டேன், விடமாட்டேன் என்பதாம். இந்த இரண்டு வரிகளும் ஒன்றோடு ஒன்று பொருந்தும் என்பதால் இது சேர்க்கப்பட்ட தாம். இந்த இடைசருகல்களால் அந்த பாட்டு மெஹா ஹிட் ஆனதாம். படத்தின் தயாரிப்பாளரும் இந்த இணைப்பு குறித்து பாரட்டினாராம்.
நடிகர் விஜய் படத்தில் வரும் பாடலில் ‘நா உளறலண்ணா நைஸ் சாங்க் இது கேளுங்கண்ணா’ என்பதை போல டி.எம்.எஸின் உளறல் பாடலை வெற்றியடையச்செய்தது.