cinema news
லேட்டா என்ட்ரி கொடுத்த யேசுதாஸ்…பறிபோன சூப்பர் ஹிட் பாடல்!…எந்த பாட்டு அது?…
இளையராஜாவின் இசையாற்றல் தமிழ் சினிமாவை வேறு ஒரு பாதைக்கு அழைத்து சென்றது. மென்மை,அதிரடி என கொடுக்கப்டும் சூழ்நிலைக்கேற்ப மெட்டமைத்து கொடுப்பதில் வல்லவர்’
அவரது பாடல்களில் வைரமுத்துடன், இணைந்த இசையமைத்தவைகளில் பல சூப்பர் ஹிட். இருவரின் கூட்டணியில் உருவான பாடல்கள் படத்தில் இடம் பெருகிறது என்றால், பாடல் மட்டுமல்ல, படமும் நிச்சயமாக வெற்றி தான் என அடித்து சொல்லப்பட்ட காலமும் உண்டு.
சிவாஜி, ரஜினி,கமல் துவங்கி அஜித்,விஜய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இசை அமைத்தவர்.இன்னும் சொல்லப்போனல் அவர்களை மேலும் பிரபலங்களாக மாற்றியது இவரது பாடல்கள்.
மோகன், ராமராஜனின் படங்கள் “பாக்ஸ் ஆபீஸ்” வசூலில் எகிறி நிற்க காரணியாக இருந்தது இவரின் தேன்சுவை இனிப்பு பாடல்களுமே.
தான் இசையமைக்கும் படங்களில், பாடல்களை பாடியும் வருகிறார். அதில் பல சூப்பர் டூப்பர் ஹிட். “நாயகன்” படத்தில் வரும் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடல் போல ஏராளமானவை இவரது குரல் வளத்தால் வெற்றியடைந்தவை.
இவரது இசையில் பாடல் ஒன்றினை பாட ஒருமுறை கே.ஜே.யேசுதாஸ் அழைக்கப்பட்டிருந்தார். அவரது வருகையில் தாமதம் இருந்ததாம். அந்த பாட்டுக்கு டிராக் பாடினார் இளையராஜா. யேசுதாஸ் வந்து அதை கேட்டு விட்டு நீங்களே சிறப்பாக பாடி இருக்கிறீர்கள். இதையே படத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார்.
“கந்தர்வக்குரலோன்” என அன்பாடு அழைக்கப்பட்டு, கோடிக்கணகான இசை பிரியர்களை இன்றும் வசியப்படுத்தியிருப்பவர் யேசுதாஸ்.
அவரின் தாமதமாத்தால், இளையராஜா பாடிய பாடல் தான் “தாய் மூகாம்பிகை” படத்தில் வரும் “ஜனனி, ஜனனி”.
சமஸ்கிருதம், தமிழ் என இரு மொழிகளின் கலவையாக வந்த பாடலை நேர்த்தியாக பாடியிருப்பார். இவரின் குரலால் தான் பாடலின் மெருகேறியது எனவும் சொல்லப்பட்டது,
ஒரு வேளை யேசுதாஸ் பாடியிருந்தால் அது வேறுவிதமாக ஒலித்தும், இன்னொரு பரிமாணத்தில் வெற்றியடைந்திருக்கும். இறுதியில் இளையராஜாவுக்காகவே இந்த பாடல் எழுதப்பட்டது போல் தான் அமைந்தது