thurav
thurav

காலா மாதிரி ஹிட் ஆவாரா காள மாடன்?…துருவ நட்சத்திரமாக மாறுவாரா துருவ்?…

“அட்டகத்தி” படத்தில் அம்சமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு இயக்குனராக மாறினார் பா.ரஞ்சித். பின்னர் கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” படத்தை எடுத்தார். அதைப்போல ரஜினியை வைத்து  “கபாலி”, “காலா” போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித்.

“பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். சமூக நீதியை மையமாக வைத்து வந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் பிரபலங்களின் வரிசையில் இணைந்தார்.

தனுஷை வைத்து அவர் இயக்கிய “கர்ணன்” படமும் வெற்றியை தனது வசமாக்கியது. உதயநிதி ஸ்டாலினை வைத்து “மாமன்னன்” திரைப்படத்தை இயக்கினார். ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனலிருந்து இந்த படம் மிகப்பெரிய சர்ச்சைகளை எதிர்கொண்டு தான் திரைக்கு வந்தது.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து சொல்லும் விதமாக படமாக உள்ள “பயோ-பிக்கை” இயக்க தனுஷ் முதலில் மாரி செல்வராஜைத்தான் பரிந்துரைத்துள்ளார். சில காரணங்களால் இளையராஜா படத்தை மாரிசெல்வராஜால் இயக்க முடியாமல் போனது.

thuruv maariselvaraj
thuruv maariselvaraj

பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் இவர்கள் இருவரும் தற்பொழுது ஒரு படத்தின் மூலம் இணையுள்ளார்கள். ரஞ்சித்தின்’ நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது.

‘சீயான்’ விக்ரமின் மகனான துரு விக்ரம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தனது தந்தையப்போலே இவரும் வருவார் என்கின்ற எதிர்பார்ப்பை கிளப்பி தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். துருவ் விக்ரம், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் கூட்டணி அமைக்கவுள்ள படத்திற்கு “பைசன் காள மாடன்” என பெயரிடப்பட்டுள்ளது.