ஏவிஎம்மின் தூங்காதே தம்பி தூங்காதே 37ம் ஆண்டு கொண்டாட்டம்

ஏவிஎம்மின் தூங்காதே தம்பி தூங்காதே 37ம் ஆண்டு கொண்டாட்டம்

கமலஹாசன் நடிக்க கடந்த 1983ம் ஆண்டு நவம்பர் 4ல் வெளியானது தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படம். இந்த திரைப்படத்தில் கமல், ராதா, வினுச்சக்கரவர்த்தி, கவுண்டமணி, மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இளையராஜா இசையமைப்பில் வானம் கீழே வந்தாலென்ன, சும்மா நிக்காதிங்க, அட மாமா, முக்கியமாக நானாக நானில்லை தாயே போன்ற பாடல்கள் மிக புகழ்பெற்றன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இப்பாடல்கள் பெற்றன.

இப்படத்தை இயக்கி இருந்தவர் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் திரு எஸ்.பி முத்துராமன் அவர்கள்.

ஏவிஎம் நிறுவனத்துக்கு இப்படம் நல்லதொரு வெற்றியையும் பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 4ம் தேதி அவ்வருட தீபாவளி வெளியீடாக வந்தது.

இப்படத்தின் 37ம் ஆண்டு நிறைவு விழாவை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.