cinema news
கண்கலங்க வைத்த சாதனை…விஜயகாந்த் மீது ரசிகர்கள் வைத்திருப்பது கணக்கிடமுடியாத அன்பு…
“புரட்சி கலைஞர்”, “கேப்டன்”என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அவர் இறந்து விட்டதாக யாரும் நம்ப கூடவில்லை. இந்த நிமிடம் வரை அவரின் ரசிகன் ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தான் நினைத்து பூஜித்துக்கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். பெரும் திரளான ரசிகர்கள் புடை சூழ நடந்தது அவரின் இறுதி ஊர்வலம்.
கூடிய கூட்டத்தை பார்த்து விஜயகாந்த்தின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுது நன்றி சொன்ன காட்சியையும் பார்க்க முடிந்தது அவரின் இறுதி ஊர்வலத்தில்.
விஜயகாந்தினுடைய பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது அலுவலகத்தில் உள்ள நினைவிடம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் 15 லட்சத்துக்கு மேலானோர் நினைவிடத்திற்கு வருகை தந்து விஜயகாந்த் மீதான தங்களது அன்பினை காணிக்கையாக்கி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
லிங்கன் புக் ஆஃப்ரெக்கார்ட்ஸ் (Lincoln Book Of Records)ல் குறைந்த நாட்களில் அதிக பட்சமானோருக்கு உணவு வழங்கிய நினைவுச்சின்னம் என்ற சாதனையை புரிந்துள்ளது விஜயகாந்தின் நினைவிடம். இது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலான நினைவுச்சின்னங்களை வைத்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகும்.
உயிருடன் அவர் இருந்த வரை யாரும் பசியோடு இருக்கக்கூடாது என நினைத்து தன்னை தேடி வரும் ரசிகனுக்கு தனது அலுவலகத்தில் உணவு சாப்பிட வைத்தே தான் அனுப்புவாராம்.
‘கம்பன் வீட்டு தறியும் கவி பாடும்’ என சொல்லப்படுவதை உண்மையாக்கி காட்டிவிட்டது கேப்டனின் நினைவிடம். தினசரி பூஜைகளுடன் அண்ணதானமும் வழங்கப்பட்டு வருவது தொடரும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.